@ikrthik Profile picture

யாத்திரி

@ikrthik

writer

Similar User
ஜா.வி photo

@thisiswatigot

Ramkumar Comic photo

@ramkumarcomic

யாதுமானவன் photo

@yaadhu143

🌴 T.R.🌴 photo

@TRAMESH21548526

இந்திரா photo

@indhiratweetz

அரூபி photo

@aroobii_

❤❤சுகன்யா ❤❤ photo

@enkavithai7

ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮 photo

@i_akaran

சௌம்யா photo

@arattaigirl

ச ப் பா ணி photo

@manipmp

டேனியப்பா photo

@minimeens

யாழினி∞ photo

@THARZIKA

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ photo

@Shenbacute

சவேதி😌😊😇😶😉😍😷 photo

@Thiyagu_Twits

ஆம்பள சிங்கம் photo

@meenammakayal_

Pinned

பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள், மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை!.


கொஞ்சம் அன்பைத் தா என்று கேட்டு நிற்க முடியவில்லை "விட்டுப்போகாதே" எனச் சொல்லமுடியவில்லை. எப்போதும் உன்னிடம் பலவீனமாக இருந்த நான், நீ விலகும்போது மட்டும் ஸ்திரமாகக் காட்டிக் கொள்கிறேன் தன்மானம் மிக்க ஓர் ஆன்மா யாருக்கும் தெரியாமல் - அழுதுகொள்வதே விதி.


உன்னோடான உரையாடல் என்ன செய்யும்? "சாதாரண ஒரு நாளினை தோரணம் கட்டித் திருவிழாக் கோலமாக்கும்."


நான் உன்கிட்ட பேசணும் நேரம் இருக்கா? என்கிறாய். உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின் முற்றத்து வாசலில் சற்றுநேரம் நின்றுகொள்ள தயக்கத்துடன் அனுமதி கேட்பது போல. நான் என்ன செய்வேன், இத்தனை காலம் கழிந்தும் இப்போதும் நீதான் வந்ததும் என்னை அழ வைக்கிறாய்.


யாக்கை.

Tweet Image 1
Tweet Image 2

சாளரம் வழி நுழைந்து வீட்டிற்குள் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த வெயிலை ஃப்பூ ஃப்பூ என ஊதிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. என்ன செய்கிறாய்? "சூடா இருக்கு ஊதி ஊதி ஆத்துறேன்." நீ வெயிலைக் குடிக்கப் போகிறாயா? ம்ஹ்ம் வெயிலுக்கு சுடும்ல. அதான். அந்தியில் வெயில் அவளால்தான் ஆறியிருந்தது.


ஒருபோதும் எனை மறக்காதே எனும் சத்தியத்தை வாங்கிக் கொண்டு, மார்புதைந்து அழுது, கண்ணீரோடு முத்தமிட்டு, சுவடேயின்றி பிரிந்தும் போகின்ற குரூரங்களை நிகழ்த்தவல்லதே காதல்.


"எங்க போன?" சிறிது நேரம் காணவில்லை என்றதும் வந்து விழுந்திருக்கிறது இச் செய்தி. எங்கு போனேன் என்ன செய்தேன் எனச் சொல்லலானேன் எப்போதும் கூடவே இரேன் எனக் கேட்கும் உன் அறியாமைக்குள் வாழ்ந்து மடிந்துவிட்டால் போதுமென்றுதான் தோன்றுகிறது.


யாரோ ஒருவருடைய கண்ணீர் உங்களுக்கு யாரை நினைவுபடுத்துகிறதோ, யாரோ ஒருவரின் துயரைக் கண்டு யாருக்கு இத்துயர் வந்துவிடவே கூடாதென துடிக்கின்றீர்களோ, அவர்கள்தான் இவ்வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம்.


பெண், அழுதுமுடித்து முகம் கழுவிய பின் பேரழகாகி விடுகிறாள். எந்த ஒப்பனைகளாலும் தரமுடியாத முகத்தெளிவை ஓர் அழுகை தந்துவிடுகிறது.


நூறுநூறு விரல்களால் நிலத்தை இறுகப் பிடித்திருக்கும் சல்லிவேர் இப்பிரியம். எத்தனை வலுகொண்டு பிடுங்கினாலும் அறுபட்டு மண்ணின் நெஞ்சில் கொஞ்சம் எஞ்சும்.


லப்பர் பந்து.

Tweet Image 1
Tweet Image 2

A Short Film About Love - 1988 ( Polish Language )

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3

Loading...

Something went wrong.


Something went wrong.